Thursday 28 December 2017

பிக்பாக்கெட்டிலிருந்து உங்கள் பர்சை பாதுகாக்க ஐந்து எச்சரிக்கை டிப்ஸ்


பெரும்பாலும் பிக்பாக்கெட் அல்லது பொருட்கள் திருடுபவர்கள் அங்கே பாருங்க கீழே பணம் கிடக்குது, கர்சீப், வாட்ச் அல்லது நகை கிடக்குது என்று சொல்லி உங்கள் கவனத்தை திசை திருப்பி நீங்கள் அசரும் நேரத்தில் உங்களிடம் உள்ள பொருட்களையோ, பணத்தையோ திருடி விடுகின்றனர். பெரும் பணம் அல்லது விலையுயர்ந்த நகைகள் அணிந்து வெளியில் செல்லும்போது இப்படி யாராவது உங்கள் கவனத்தை திசைதிருப்ப முயற்சித்தால் எச்சரிக்கையாய் இருங்கள். 

5. பின்பக்க பாக்கெட்டில் பர்ஸ் வைப்பதை தவிர்க்கவும். பெரும்பாலும் திருடர்கள் உங்கள் கவனத்தை திருப்பி பின்பக்க பாக்கெட்டில் வைக்கபட்டிருக்கும் பர்ஸ், பொருட்களை எளிதாக திருடி விடுகின்றனர்.

4. நீங்கள் தோளில் மாட்டி செல்லும்  பையை உங்கள் கையால் உடலோடு அணைத்தபடி எடுத்து செல்வது நல்லது. லேசாக பையை யாராவது எடுக்க முயன்றாலும் சட்டென்று தெரிந்து விடும்

3 வெளியூர்களில் ஓட்டல்களில் தங்கும்போது விலையுயர்ந்த பொருட்களை பாதுகாப்பு லாக்கரில் வைத்து பூட்டி விட்டு செல்வது நல்லது.  

2 வெளியே செல்லும்போது செலவுக்கு எவ்வளவு பணம் தேவைப்படுமோ அதை மட்டும் எடுத்து செல்வது நல்லது. தெரியாத ஊரில் நகைகளையோ, பொருட்களையோ, பெரும் தொகையையோ செல்லும் இடங்களுக்கு எல்லாம் கையோடு  எடுத்து செல்வது நல்லதல்ல. 

1. பயணம் செய்யும்போது பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை பாதுகாக்க அவற்றை மணி பெல்ட்டில் வைத்து  அணிந்து செல்லலாம், மணி பெல்ட் வைத்திருக்காதவர்கள் பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை உள் பாக்கெட்டில் வைத்து எடுத்து செல்லலாம்.

போனஸ் டிப்ஸ்: உங்கள் பை அல்லது சூட்கேஸ் போலவே பலரும் வைத்திருந்தால் உங்கள் பையில் அல்லது சூட்கேஸில் மார்க்கர் பேனா கொண்டு எதாவது ஒரு அடையாள குறி அல்லது உங்கள் இனிஷியல் போட்டு வைத்து கொள்ளுங்கள். இது உங்கள் பையை யாரும் மாற்றி எடுத்து செல்லாமல் தவிர்த்திடும்.    

-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்