Wednesday 20 December 2017

யானையை சீண்டிய இளைஞர்களை தேடும் வனத்துறை


நேற்று கோவை மாவட்டத்தில் தடாகம் என்ற பகுதியில் இளைஞர்கள் சிலர் யானை ஒன்றை சீண்டும் காணொளி காட்சி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு  வைரல் ஆகி கொண்டிருந்தது.



ஆஸ்பெஸ்டாஸ் கூரை போடப்பட்டிருக்கும்  அந்த இடத்தில் இளைஞர் யானையை சீண்டுவதையும், யானை   ஆவேசமடைந்து    அங்குமிங்கும்    அவரை    துரத்தி ஓடுவதையும் அந்த இளைஞரின் நண்பர் படம் பிடித்துள்ளார். இப்போது அந்த இளைஞர்களை வனத்துறையினர் தேடி கொண்டிருக்கின்றனர்.   யானையை உட்பட காட்டு விலங்குகளை  துன்புறுத்தினால்   ஏழு   ஆண்டு   வரை   சிறை தண்டனை விதிக்க முடியும் என்று சட்டம் உள்ளது. 



ஏற்கெனவே சென்ற மாதம் கேரளா மாநிலத்தில் யானை ஒன்றின் மேல் பாகுபலி படத்தில் வருவது போல் ஏற முயன்ற இளைஞர் ஒருவரை யானை தூக்கி வீசும் காணொளி காட்சி வைரல் ஆனது. அந்த இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, எவ்வளவு தான் பட்டாலும் திருந்த மாட்டார்கள் போல் இருக்கிறது.