பிள்ளைகளிடம் அதிக கோபம், அதிக செல்லம் - இரண்டுமே ஆபத்து
அதிக செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைகள், பிற்காலத்தில் சமூகத்தில் மிக மோசமான மனிதர்களாக மாறி விடுகிறார்கள், அதனால் சிறு பிள்ளைகள் தவறு செய்யும்போது அவர்களை கண்டிக்காமல் இருக்க முடியாது, ஆனால் அவர்களை கண்டிக்கும் போதும் தண்டிக்கும் போதும் அவர்கள் உடலும் மனமும் அதை தாங்குமா என்பதை சிந்தித்து கண்டிப்பது
அவசியமாகிறது.
மண்ணில் விளையாடி உடைகளை அழுக்காக்கியதற்காக - ராஜஸ்தானில் பிள்ளையை கயிற்றில் தொங்க விட்டு அடிக்கும் தந்தை
பிள்ளைகளை மிருகத்தனமாக அடித்ததற்காக இந்த பாசமிகு தந்தை இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சில வீடுகளில் பெற்றோர் பிள்ளைகளை மிருகங்களை நடத்துவது போல், அடித்து துவைத்து எடுக்கின்றனர். அதில் ஒரு சில சம்பவங்கள் மட்டும் காணொளி காட்சியாக படம்பிடிக்கப்பட்டு தொலைகாட்சிகளிலும், சமூக வலை தளங்களின் மூலம் வெளி உலகுக்கு தெரிந்து வைரல் ஆகி வருகிறது, அந்த பாசக்கார பெற்றோர் மேல் சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ள படுகிறது,
அதிக செல்லம் கொடுத்து பிள்ளைகளை கெட்டு போக செய்யும் பெற்றோர் ஒரு புறம், இன்னொரு புறம் இது போன்று தங்கள் மொத்த கோபத்தையும் சேர்த்து வைத்து பிள்ளைகள் மீது காட்டும் பெற்றோர். இந்த இரண்டு வகை பெற்றோருமே தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கெடுத்து விடுகின்றனர்.
பெங்களூரில் பொய் சொன்னதற்காக பிள்ளையை அடித்து துவைக்கும் தந்தை
பெங்களூரில் பொய் சொன்னதற்காக பிள்ளையை அடித்து துவைக்கும் தந்தை
அதிக செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் பிள்ளைகள் எதிர்காலத்தில் யாருக்கும் அடங்காதவர்களாக சமூகத்தில் பொல்லாதவர்களாக மாறுகிறார்கள், அதே போல் அதிக கண்டிப்பும், தண்டனைகளும் அனுபவிக்கும் பிள்ளைகள் எந்த ஒரு விஷயத்தையும் பெற்றோர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் வெளியில் சில தீய நட்புகளை உருவாக்கி கொண்டு பொல்லாதவர்களாகவோ அல்லது கசப்புகளை தங்கள் மனதுக்குள்ளேயே வைத்து புழுங்கி எந்த ஒரு விஷயத்தையும் துணிவுடன் செய்யும் ஆற்றல் இல்லாத கோழைகளாகவோ மாறி விடுகின்றனர்.
உணவை கீழே சிந்தியதற்காக பிள்ளையை அடித்து துவைக்கும் ஆயா
அமெரிக்கா, கனடா போன்ற மேலை நாடுகளில் சிறு பிள்ளைகளையும் பெற்றோர் பெரியவர்களை போல் மரியாதை கொடுத்து நடத்துகிறார்கள், இது சிறு பிள்ளைகள தங்கள் பெற்றோர்களை நண்பர்கள் போல் நினைத்து தங்கள் வாழ்வின் தினசரி நிகழ்வுகளையும், தங்கள் சிந்தனைகளையும் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ள செய்கிறது. இதனால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே சரி எது, தவறு எது என்று போதித்து விடுகின்றனர், பிற்காலத்தில் அந்த பிள்ளைகள் வாழ்வில் முக்கிய முடிவுகளை எடுக்கும் போது அவர்கள் சுயமாக சிந்தித்து சரியான முடிவுகளை எடுக்கும் ஆற்றலை பெற்று விடுகின்றனர். சில வேளைகளில் தவறான முடிவுகளை எடுத்தாலும் அதனால் வரும் விளைவுகளை எதிர்கொள்ளவும், எதிர்காலத்தில் சரியான முடிவுகளை எடுக்க தங்கள் தவறுகளிலிருந்தும் கற்று கொள்கின்றனர்.
பிள்ளைகளை வளர்ப்பதில் மேல் நாட்டினருக்கும்
நமக்கும் உள்ள வித்தியாசம் சொல்லும் காணொளி காட்சி
அதிக செல்லம் கொடுத்து பிள்ளைகளை வளர்ப்பது எவ்வளவு ஆபத்தோ, அதே போல் அதிக கண்டிப்பும் ஆபத்தே, இனி வரும் காலங்களிலாவது சிறு பிள்ளைகளை பெற்றோர், கனிவு கலந்த கண்டிப்புடன் நடத்தி அவர்கள் வருங்கால வாழ்க்கை சிறக்க செய்யுங்கள்.
சமூக ஊடகங்களில் பின் தொடர
---------------------------------------------------------------
-----------------------------------------------