Thursday 26 September 2019

கால் டாக்சி டிரைவர் பெண்ணிடம் செய்த அராஜகம்


முன்பெல்லாம் நடுத்தர வர்க்கத்தினர் எங்காவது பயணம் செய்ய வேண்டுமென்றால் அவர்களுக்கு நன்கு தெரிந்த, பழக்கமான அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே உள்ள ஆட்டோ டிரைவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு அவருடைய ஆட்டோவில் பயணம் செய்து வந்தனர், ஆனால், ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு மக்களிடம் அதிகரித்த பின்பு தனியார் கால் டாக்ஸி  ஆப்கள் மூலம் கால் டாக்ஸி புக் செய்து பயணிப்பது சகஜமான விஷயமானது, நியாயமான கட்டணம், கிட்டத்தட்ட ஆட்டோவில் பயணம் செய்யும் அதே செலவிலேயே அலுங்காமல் குலுங்காமல் சொகுசாக காரில் பயணம் என்றால் யார் தான் கால் டாக்ஸியை பயன்படுத்தாமல் இருப்பார்கள்? 


சமீபத்தில் நடந்துள்ள ஒரு சம்பவம் பெண்கள் கால் டாக்ஸியை நம்பி புக் செய்து பயணிக்கலாமா? என்று அச்சத்தை ஏற்படுத்துகிறது, குழந்தையுடன் இரவு நேரத்தில்  தனியார் கால் டாக்ஸியில் பயணம் செய்ய வந்த ஒரு பெண்ணிடம் கால் டாக்ஸி டிரைவர் கோபமாக பேசி அவரை தன் காரை விட்டு கீழே இறங்க சொல்லி வற்புறுத்தும் காட்சி வாட்ஸ் அப்பில் வேகமாக பரவி வருகிறது, இந்த காணொளி காட்சியை பார்க்கும்போது  காரில் பயணம் செய்ய வந்த பெண் பயணி தனியார் கால் டாக்ஸி டிரைவரிடம் ஏன் தாமதமாக வந்தீர்கள்? என்று கேட்டிருக்கக் கூடும் என்று தோன்றுகிறது, அந்த கேள்விக்கு பின்பு கால் டாக்ஸி டிரைவர் ஆவேசமாக குழந்தையுடன் பயணிக்கும் பெண் என்றும் பாராமல் அந்த பயணியை கீழே இறங்க சொல்லும் காட்சி (பயணியால்) படம்பிடிக்கப்பட்டுள்ளது. 

கால் டாக்ஸி டிரைவர்கள் எல்லோருமே இப்படிப்பட்டவர்கள் இல்லை, எனக்கு தெரிந்து பயணிகளை மரியாதையுடன் நடத்தும் எவ்வளவோ நல்ல குணமுடைய கால் டாக்ஸி டிரைவர்கள் இருக்கிறார்கள், ஆனால் இது போன்று பயணிகளை உதாசீனப்படுத்தி கேவலமாக நடத்தும் ஒரு சில டிரைவர்களால் தான் மொத்தமாக எல்லா டிரைவர்களும் இப்படிதான் இருப்பார்களோ? என்ற தவறான எண்ணம் மக்கள் மனதில் விதைக்கப்படகூடிய வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட கால் டாக்ஸி நிறுவனம் இது போன்று நடக்கும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்நிலை மாறும்.
-----------------------------------------

---------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------------------------- -----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்